சிவன் கோவில்களில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

சிவன் கோவில்களில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.

Update: 2023-09-07 18:45 GMT

சிவன் கோவில்களில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.

நீலாயதாட்சி அம்மன் கோவில்

நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்மவாகன கால சம்ஹார பைரவருக்கு ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு திரவியப்பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதேபோல் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள மகாகால சம்ஹார பைரவருக்கும், காசி பைரவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

சொர்ண ஆகர்ஷண பைரவர்

அதேபோல் நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலில் சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதேபோல் வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி ரஜதகீரிஸ்வரர் கோவில், திருவாய்மூர் தியாகராஜ கோவில் அஷ்ட பைரவர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமருகல்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மெயின் ரோட்டில் உள்ள வன்மீகநாதர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சீயாத்தமங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வேதாரண்யம்

வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூரில் உள்ள மேலக்மறைகாடர் கோவிலில் காலபைவரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்