பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு
மறைஞாயநல்லூர் மேலமறைகாடர் கோவிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த மறைஞாயநல்லூரில் உள்ள மேல மறைகாடர் கோவிலில் உள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து யாகம் நடந்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.