வாலாஜாபாத்தில் வாலிபர் குத்திக்கொலை

வாலாஜாபாத்தில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.;

Update: 2023-04-03 08:45 GMT

குத்திக்கொலை

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி நேருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் வினித் குமார் (வயது 25), பார்த்திபன் (25). நண்பர்களான இவர்கள் இருவரும் நேரு நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது பார்த்திபனின் நண்பரான ஆட்டோ டிரைவர் சின்ராஜ் அங்கு வந்தார். சின்ராஜ், பார்த்திபன் இருவரும் சேர்ந்து வினித் குமாரை கடுமையாக தாக்கி மதுபாட்டிலை உடைத்து கழுத்தில் குத்தியதாக தெரிகிறது.

இதில் படுகாயம் அடைந்த வினித் குமார் ரத்த வெள்ளத்தில் துடித்து சத்தம் ேபாட்டார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக வினித்குமாரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே வினித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

வினித் குமார் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு மது பாட்டிலால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய பார்த்திபன், சின்ராஜ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வினித்குமார் கர்ப்பமாக உள்ள தனது மனைவியை பார்க்க கேரளாவுக்கு செல்ல இருந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்