வாலிபருக்கு கத்திக்குத்து

மதுரையில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது ெதாடர்பாக 6 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-06-08 19:47 GMT

மதுரை செல்லூர் தத்தனேரி கீழ வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசந்திரன் (வயது 23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அழகுபாண்டி (23), விஜயராஜன் (25) உள்ளிட்டோர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று தத்தனேரி மெயின் ரோட்டில் கிருஷ்ணசந்திரன் நடந்து சென்றார். அப்போது அழகுபாண்டி, விஜயராஜன் உள்ளிட்ட 6 பேர் அவரை வழிமறித்து தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் கிருஷ்ணசந்திரனை கத்தியால் குத்தி விட்டு தப்பி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 6 பேர் பேரை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்