வாலிபருக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது

வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-04 19:45 GMT

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கொல்லாபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் தம்பிதுரை (வயது 30). கூலி தொழிலாளி. இந்த கிராமத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு தம்பிதுரையின் நண்பரான கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் வந்ததாக தெரிகிறது. இவருக்கும், இதே கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் கண்ணதாசனுக்கும்(21) முன்விரோதம் காரணமாக பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து தம்பிதுரை, வெங்கடேசனை ஊருக்கு அனுப்பி உள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று இரவு தம்பிதுரையை கண்ணதாசன் கத்தியால் குத்தியதாகவும், அவருடைய நண்பர் வீரபாண்டியன் என்ற தினேஷ்(27) கட்டையால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தம்பிதுரை கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து கண்ணதாசன், தினேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து நடத்தி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்