சாஸ்தா கோவில் ஆற்றில் சிக்கிய வாலிபர் மீட்பு

சாஸ்தா கோவில் ஆற்றில் சிக்கிய வாலிபர் உயிருடன் மீட்கப்பட்டார்.;

Update: 2023-10-24 19:36 GMT

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. இந்தநிலையில் ஆயுத பூஜை விடுமுறை தினமான நேற்று முன்தினம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சாஸ்தா கோவில் ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது சாஸ்தா கோவில் அமைந்துள்ள வனப்பகுதிக்கு கீழே உள்ள ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அங்கு குளித்து கொண்டு இருந்த வாலிபர் ஒருவர் கரைக்கு வர முடியாமல் மாட்டிக் கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து கயிறு கட்டி அந்த வாலிபரை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்