வாகனம் மோதி வாலிபர் பலி
விக்கிரவாண்டி அருகே வாகனம் மோதி வாலிபர் பலியானாா்.;
விக்கிரவாண்டி:
திண்டிவனம் அருகே பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மகன் புவனேஸ்வரன்(வயது 18). இவர் நேற்று இரவு 8 மணிக்கு தனது மோட்டார் சைக்கிளில் அதே ஊரைச் சேர்ந்த தனசேகர் மகன் அரிசங்கர்(18), சின்னதச்சூரை சேர்ந்த தினகரன்(21) ஆகியோருடன் விக்கிரவாண்டி நோக்கி வந்தார். பேரணி கூட்ரோடு சங்கராபரணி ஆற்றுபாலம் அருகே வந்தபோது பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி, 3 பேரும் சாலையில் விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம், அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த 3 பேரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அரிசங்கர் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.