பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள அழகாபுரி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் சத்யராஜ் (வயது 31). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். மனைவியின் சொந்த ஊரான பாவூர்சத்திரம் அருகே உள்ள பஞ்சபாண்டியூர் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு விட்டு இரவில் தனது மோட்டார் சைக்கிளில் சத்யராஜ் மட்டும் ஊருக்கு திரும்பினார்.
நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலையில் சாலைப்புதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சத்யராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.