கார் மோதி வாலிபர் பலி

சாம்பவர்வடகரை அருகே கார் மோதி வாலிபர் பலியானார்.

Update: 2023-10-08 19:00 GMT

சுரண்டை:

தென்காசி அருகே மேலகரத்தை சேர்ந்த அருள்தாஸ் மகன் ராஜாமணி (வயது 38). இவரது மனைவி அமுதா (35). இவர் சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.  கணவன்- மனைவி இருவரும் மேலகரத்தில் இருந்து சேர்ந்தமரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

இடைகால்- வேலாயுதபுரம் சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் ராஜாமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜாமணி தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அமுதா படுகாயமடைந்தார்.

தகவலறிந்ததும் சாம்பவர்வடகரை போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான ராஜாமணியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாம்பவர்வடகரை போலீசார் வழக்குப் பதிவு செய்து கார் டிரைவரான ரெட்டியார்பட்டி காடுவெட்டியை சேர்ந்த ஞானப்பிரகாசம் மகன் சிவா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்