வாலிபர் பலி;2 பேர் படுகாயம்
ேமாட்டாா் ைசக்கிள் விபத்தில் வாலிபா் பலியானாா்.
கொல்லங்கோடு:
நித்திரவிளை சந்திப்பில் இருந்து சின்னத்துறை நோக்கி இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தார். பாலமடம் பகுதியில் சென்றபோது, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளிலுடன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த அபி(வயது21) என்ற வாலிபர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஒருவரை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், மற்றொருவரை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து நித்திரவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.