சாலை விபத்தில் வாலிபர் படுகாயம்

சாலை விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-01-13 18:35 GMT

தோகைமலை அடுத்த ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 29). இவர் தனது வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் ஊத்துக்குளி கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த நெல் அடிக்கும் எந்திரம் ஒன்று எந்த முன்அறிவிப்பின்றி (சிக்னல்) திடீரென பின்னோக்கி வந்து, குமரவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த குமரவேலுவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குமரவேல் மனைவி ஸ்ரீதேவி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்