கார் மோதி வாலிபர் படுகாயம்

பெரியகுளம் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.;

Update: 2023-07-11 18:45 GMT

பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியை சேர்ந்தவர் விஜய் (வயது 22). இவர், பெரியகுளத்தில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர், பெரியகுளம்-வடுகப்பட்டி சாலையோரம் மோட்டார்சைக்கிளில் அமர்ந்து செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்