கார் விபத்தில் வாலிபர் பலி

திருவண்ணாமலை அருகே கார் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-07-06 16:54 GMT

செங்கம் தாலுகா காயம்பட்டு சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் தனசெழியன் (வயது 71). இவரது மகன் மகேஷ்வரன் (29).

இவர் செங்கத்தில் நகை அடகுக்கடை வைத்திருந்தார்.

இவர் கடந்த 4-ந் தேதி இரவு அவரது நண்பரின் காரில் வீட்டில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்துவிட்டு பின்னர் வீடு திரும்பினார்.

அவர் காரில் செங்கம் சாலை அஸ்வநாதசுரணை அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டதால் மகேஷ்வரன் வந்த கார் லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் வந்த மகேஷ்வரன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்