விபத்தில் வாலிபர் சாவு

காரியாபட்டி அருகே விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-03-10 20:06 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டி அருகே மேலகள்ளங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வீரணன் (வயது 31). இவர் மோட்டார் சைக்கிளில் ஆவியூர் கிராமத்திற்கு வந்து விட்டு மேல கள்ளங்குளம் கிராமத்திற்கு செல்வதற்கு குரண்டி சாலையில் ஒரு தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் புதிதாக பாலம் கட்டுவதற்காக தோண்டி வைக்கப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே வீரணன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்