மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள வேம்படி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த ராஜ்குமார் மகன் ஆனந்தபாபு (வயது 22). வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் சமீபத்தில் தான் ஊர் திரும்பினார். இந்தநிலையில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புதுப்பட்டினம் சென்று விட்டு, மீண்டும் வேம்படி கிராமத்துக்கு வந்து கொண்டிருந்தார். வேட்டங்குடி அருகே அவர் வந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆனந்தபாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.