காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு
கொளத்தூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.
கொளத்தூர்,
கொளத்தூரை அடுத்த மூலக்காடு ஜோகி மானூரை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 35). இவர், நேற்று முன்தினம் காவிரி நீர்தேக்க பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது ஆற்றில் விழுந்த அவர், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேட்டூர் தீயணைப்பு துறையினர் சிவகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.