விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2022-12-30 20:19 GMT

ஸ்கூட்டர் மீது மோதியது

திருச்சி உறையூரை சேர்ந்த திருஞானசம்பந்தத்தின் மகன் விக்னேஸ்வரன்(வயது 24). பட்டய படிப்பு படித்துள்ள இவர் வேலைக்காக வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று அரியலூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பூஸ்டர் ஊசி போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அரியலூர் நோக்கி சென்றார்.

கீழப்பழுவூரில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு ஆலை அருகே சென்றபோது முன்னால் ஒரு பெண் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டரின் பின்புறம் மோட்டார் சைக்கிள் லேசாக மோதியது. இதில் நிலை தடுமாறிய விக்னேஸ்வரன் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்துள்ளார்.

சாவு

அப்போது எதிரே வந்த அரசு பஸ்சின் சக்கரம் விக்னேஸ்வரனின் தலையில் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் அங்கு வந்து, விக்னேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்