கார் மோதி வாலிபர் சாவு

சேதுபாவாசத்திரம் அருகே கார் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-08-24 19:18 GMT

சேதுபாவாசத்திரம் அருகே கார் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

கார் மோதி விபத்து

தஞ்ைச மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள விளங்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது50). இவருடைய மகன் அருள்செபஸ்டியான் (19). இவர் சம்பவத்தன்று உறவினரை அழைப்பதற்காக தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சேதுபாவாசத்திரம் சென்று கொண்டிருந்தார். சம்பைபட்டினம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே பட்டுக்கோட்டையில் இருந்து மானாமதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சேதுபாவாசத்திரம் அருகே கார் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அருள்செபஸ்டியான் தலையில் பலத்த காயம் அடைந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மணமேல்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் வாலிபர் பலியானது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்