வாலிபர் தீக்குளித்து தற்கொலை

கணியம்பாடி அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-04-26 18:55 GMT

வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த மோத்தக்கல் கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சந்துரு (வயது 30). இவர், கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி அவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்துரு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்