கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்தார்.

Update: 2023-08-28 19:22 GMT

சிவகாசி, 

திருத்தங்கல் கக்கன் காலனியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 32). குடும்ப செலவிற்காக தினேஷ்குமார் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை செலுத்த முடியாமல் அவர் திணறி வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தினேஷ்குமாரின் மனைவி கலாராணி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்