மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தற்கொலை

ராமநாதபுரம் அருகே மனைவி கோபித்து விட்டு சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-07-28 16:07 GMT

ராமநாதபுரம் அருகே உள்ள சூரங்கோட்டை குறிஞ்சிநகரை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 29). இவரது மனைவி ரம்யா (21). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை பால்பாட்டிலை கொட்டியதால் ரம்யா, மகனை கண்டித்துள்ளார். இதில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரம்யா மகனை தூக்கி கொண்டு வெளியே பக்கத்து வீட்டிற்கு சென்று விட்டாராம். பின்னர் இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு வந்தபோது பாண்டியராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதுகுறித்து ரம்யா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்