மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
தேனியில் திருமணம் ஆகாத விரக்தியில் மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த சின்னப்பாண்டி மகன் பாண்டிச்சாமி (வயது 28). இவருக்கு 3 சகோதரிகள். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பாண்டிச்சாமிக்கு திருமணம் ஆகவில்லை. செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த அவர், அடிக்கடி மது அருந்தி வந்தார். இந்நிலையில் தனக்கு திருமணம் ஆகாத விரக்தியில் கடந்த 19-ந்தேதி மதுவில் விஷம் கலந்து குடித்தார். பின்னர் அதை தனது உறவினரிடம் தெரிவித்தார். உடனடியாக அவர், சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதுகுறித்து அவருடைய தந்தை சின்னப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில், தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.