மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-06 19:45 GMT

காரியாபட்டி, 

திருச்சுழி அருகே உள்ள எம்.புளியங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் (வயது 22). இவர் வெளியூரில் தங்கி கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் எம்.புளியங்குளத்ைத அடுத்த மயிலி கிராமம் அருகே உள்ள ெரயில்வே பாலத்திற்கு கீழே மதுவில் விஷத்தை கலந்து குடித்த நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அய்யனார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்