வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கரூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்கில் தொங்கிய வாலிபர்
கரூர் மண்மங்கலம் அருகே உள்ள கீழ சக்கரபாளையத்தை சேர்ந்தவர் தீபன் குமார் (வயது 26). இவர் கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் தீபன்குமாருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளில் உடலை காண்பித்தும் வயிறு வலி சரியாகவில்லையாம்.
இதனால் மனம் உடைந்து காணப்பட்ட தீபன்குமார் சம்பவத்தன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். இதைக்கண்ட அவரது உறவினர்கள் தீபன்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தற்கொலை
அங்கு தீபன்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் தற்கொலை குறித்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.