வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜீயபுரம்:
ஜீயபுரம் அருகே பெட்டவாய்த்தலை தேவஸ்தானம் எல்லைக்கரை பகுதியை சேர்ந்தவர் சிவகுருநாதன். இவருடைய மகன் இளைய பாரதி(வயது 25). 10-ம் வகுப்பு படித்துள்ள இவர் திருச்சியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சில நாட்களாக அவர் வேலைக்கு செல்லாமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை பெற்றோர் வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இதில் மனவேதனை அடைந்த இளைய பாரதி காந்திபுரம் அருகே உள்ள ஒரு மாமரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து பெட்டவாய்த்தலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இளையபாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.