வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜோலார்பேட்டை,
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் கோபி (வயது 22), கட்டிட தொழிலாளி. இவர், கடந்த 16-ந்தேதி வீட்டில் தூக்கில் தொங்கினாா்.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.