வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வள்ளியூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-16 18:44 GMT

வள்ளியூர்:

வள்ளியூர் அருகே உள்ள வடக்கு வண்டலம்பாடு மேலத்தெருவை சேர்ந்த ராஜன் ஜெயசீலன் மகன் எரோமியா ஜஸ்டின் (வயது 29). இவர் அடிக்கடி மதுக்குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது பெற்றோர் கண்டித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் சேலையால் எரோமியா ஜஸ்டின் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்