வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-13 20:06 GMT

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை அடுத்த புதுக்குடி நடுத்தெருவைச் சேர்ந்தவர் பிச்சையா கார்த்திகேயன் என்பவரது மகன் வேலு என்ற சதீஷ் (வயது 23). பட்டதாரியான இவர் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர கடந்த மாதம் விண்ணப்பித்து இருந்தார். இதில் எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற சதீஷ் மருத்துவ பரிசோதனையில் சிறிது கண் பார்வை குறைபாடு காரணமாக தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த சதீஷ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அவரது தந்தை பிச்சையா கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்