வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வன்னிக்கோனேந்தலில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-18 18:45 GMT

பனவடலிசத்திரம்:

வன்னிக்கோனேந்தல் ஊரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கார்த்திக் (வயது 23). இவர் டிராக்டர் வைத்து சொந்தமாக தொழில் செய்து வந்தார். இவர் நேற்று மதியம் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் தேவர்குளம் போலீசார் விரைந்து வந்து கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திக் டிக்-டாக் வீடியோக்கள் எடுத்து அதிகமாக சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்