வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடையநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வெள்ளாலங்கோட்டையைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). இவருக்கும் கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சுதா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்கள் அங்குள்ள ஒரு தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதா திடீரென்று மாயமனார். இதனால் மனமுடைந்த மூர்த்தி வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ெசன்று, மூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.