விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

நெல்லை டவுனில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-05-06 19:15 GMT

நெல்லை டவுனை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 35). இவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ஊருக்கு வந்த சந்தோஷ்குமார் சில மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. சம்பவத்தன்று அவர் விஷம் குடித்து மயங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சந்தோஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags:    

மேலும் செய்திகள்