விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-29 19:23 GMT

ராஜபாளையம், 

ராஜபாளையம் முனியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியராஜ் மகன் பாலமுருகன் (வயது 24). இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் சம்பள பணத்தை வீட்டிற்கு தராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பாலமுருகன் பூச்சி கொல்லி மருந்தை(விஷம்) குடித்தார். உடனே அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்