விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

ராமநத்தம் அருகே மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததை மனைவி கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-22 18:45 GMT

ராமநத்தம், 

ராமநத்தம் அருகே கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 32). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் அவர் செம்பாக்குறிச்சியில் உள்ள தனது மாமியார் வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார்.

இதில் தினந்தோறும் மதுகுடித்துவிட்டு ராமர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் ராமருக்கும் அவரது மனைவி செண்பகவள்ளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு சென்றதால், ராமருக்கும் செண்பகவள்ளிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ராமரை செண்பகவள்ளி திட்டி கண்டித்ததாக தெரிகிறது.

போலீசார் விசாரணை

இதனால் மனமுடைந்த ராமர் கொரக்கவாடியில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ராமர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்