விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
கடலூர் முதுநகர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் அடுத்த தொண்டமாநத்தம் கோதண்டராமபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செங்குட்டுவன் மகன் சம்பத்குமார் (வயது 37). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சம்பத்குமார் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பத்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.