விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
தேனி அல்லிநகரத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி அல்லிநகரம் பொம்மையகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). டிப்ளமோ பட்டதாரி. அதே ஊரை சேர்ந்தவர் ரதி (21). இவர்கள் இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. மணிகண்டன் வேலை கிடைக்காமல் மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் கடந்த 10-ந் தேதி அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.