வக்கீல் கொலை வழக்கில் கோர்ட்டில் வாலிபர் சரண்
வக்கீல் கொலை வழக்கில் கோர்ட்டில் வாலிபர் சரண் அடைந்தார்.;
தூத்துக்குடி சோரீஸ்புரத்தை சேர்ந்தவர் வக்கீல் முத்துக்குமார் (வயது 48). இவர் கடந்த மாதம் 22-ந் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜெயப்பிரகாசை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
இந்த நிலையில் தேடப்பட்டு வந்த ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (32) என்பவர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் முருகேசன் என்பவரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.