வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது

மாணவியின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-26 18:45 GMT

மன்னார்குடி:

கூத்தாநல்லூரை அடுத்த வக்ராநல்லூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் தமிழ்வாணன் (வயது 24).இவர் டிரம்ஸ் வாசிக்கும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆசை வார்த்தைகளை கூறி மாணவியின் புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டுள்ளார்.. இதை தொடர்ந்து அந்த மாணவியும் தனது புகைப்படத்தை அனுப்பி உள்ளார். இந்த புகைப்படத்தை தமிழ்வாணன் ஆபாசமாக மார்பிங் செய்து அதை அந்த மாணவிக்கு அனுப்பி வைத்து நீ நேரில் வர வேண்டும். இல்லை என்றால் இந்த படத்தை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என மிரட்டி உள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள், மன்னார்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தமிழ்வாணனை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்