வீட்டை சூறையாடிய வழக்கில் வாலிபர் கைது

மணல் கடத்துவது குறித்து தகவல் தெரிவித்ததாக வீட்டை சூறையாடிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-19 19:09 GMT

ஜோலார்பேட்டை அருகே உள்ள கூத்தாண்ட குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 39). இவர்களது உறவினருக்கு சொந்தமான நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை (28), தெக்குப்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (35), சின்ன மோட்டூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி (55) உள்ளிட்ட சிலர் மணல் கடத்துவதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் போலீசார் கடந்த 16-ந்் தேதி அன்று சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர். போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

மணல் கடத்துவது குறித்து வெங்கடேசன் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக நேற்று முன்தினம் இரவு சிலர் வெங்கடேசன் வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி, ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் வாகனங்களை உடைத்துள்ளனர்.

இது குறித்து மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பிரபாகரன், ஏழுமலை, ராமசாமி ஆகிய மூன்று பேர் மீது ஜோலார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சேதுக்கரசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்