கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-07-28 19:37 GMT

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரம்மநாயகம் (வயது 36). இவருடைய கார் கண்ணாடியை அதே பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி, மகாராஜா ஆகியோர் சேர்ந்து உடைத்து சேதப்படுத்தியது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை மனதில் வைத்துக் கொண்டு முத்துச்சாமி, மகாராஜா ஆகியோரின் நண்பரான வீரவநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த பொன்ராஜ் (20) என்பவர் பிரம்மநாயகத்தின் வீட்டிற்கு முன்பு வந்து அவருடைய மோட்டார் சைக்கிளையும், வாசல் கதவையும் அரிவாளால் தாக்கி சேதப்படுத்தியுள்ளார். பின்னர் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரம்மநாயகம் வீரவநல்லூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பொன்ராஜை நேற்று கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்