திருச்சி ரெயில் நிலையத்தில் செல்போன் திருடிய வாலிபர் கைது
திருச்சி ரெயில் நிலையத்தில் செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
திருச்சி ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 17-ந்தேதி சென்னையில் இருந்து - திருச்சிக்கு சோழன் எக்ஸ்பிரஸ் விரைவு ரெயில் வந்தது. அப்போது சீர்காழியில் இருந்து திருச்சி வந்த அமுதா என்பவர் தனது செல்போனை ரெயில் பெட்டியில் வைத்துவிட்டு இறங்கினார். பின்னர் மீண்டும் அந்த ரெயிலில் ஏறிபார்த்த போது செல்போனை கானவில்லை. உடனே இது குறித்து திருச்சி ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் ரெயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் உள்ள பூதலூர் பகுதியை சேர்ந்த வடிவேல் (வயது 25) என்பவர் செல்போனை எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமலை ராஜா வழக்குப்பதிவு செய்து வடிவேலை கைது செய்தார்.