பயணியிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
புளியமங்கலம் ரெயில் நிலையத்தில் பயணியிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அரக்கோணம்
புளியமங்கலம் ரெயில் நிலையத்தில் பயணியிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அருள் செல்வன். இவர் சம்பவத்தன்று புளியமங்கலம் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் இவரது செல்போனை திருடிச்சென்றனர். இது குறித்து அருள் செல்வன் அரக்கோணம் ரெயில்வே போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை திருடிச்சென்ற நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று புளியமங்கலம் ரெயில்நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடைமேடையில் சுற்றி திரித்து கொண்டிருந்த இளைஞர்களை அரக்கோணம் ரெயில்வே போலீசார் பிடிக்க முயன்றனர். உடனே அவர்கள் தப்பி ஓடினர். அதில் ஒருவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் அரக்கோணம் அசோக் நகரை சேர்ந்த நாகராஜ் (வயது 19) என்பதும், செல் போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து நாகராஜை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.