செல்போன் திருடிய வாலிபர் கைது

செல்போன் திருடிய வாலிபர் கைது

Update: 2023-06-14 18:45 GMT


உத்தரப்பிரதேசம் மாநிலம் பாரபங்கி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன் (வயது 22). இவர் ராமநாதபுரம் ெரயில்வே பீடர் ரோடு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். ராமநாதபுரம் அண்ணா நகரில் அறை எடுத்து தங்கி இருந்த இவர் நேற்று முன்தினம் பணிமுடிந்து மோட்டார் சைக்கிளில் தனது அறைக்கு சென்றுள்ளார். அறையின் வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த அவரின் செல்போனை அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (23) என்பவர் எடுத்துள்ளார். செல்போனை மறந்துவிட்டு சென்ற அர்ஜுன் திரும்பி எடுக்கவந்தபோது விக்னேஷ்வரன் அதனை எடுப்பதை கண்டு கத்தி கூச்சலிட்டார். ஆனால் விக்னேஸ்வரன் ஓடி மறைந்தார். இதுகுறித்து ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்