செல்போன் திருடிய வாலிபர் கைது

நெல்லை அருகே செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-28 19:22 GMT

நெல்லை அருகே உள்ள கொங்கந்தான்பாறையை சேர்ந்தவர் அமல்ராஜ் மகன் அலெக்சாண்டர் (வயது 34). இவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் மூன்றடைப்பை சேர்ந்த இசக்கியப்பன் (23) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஓட்டலில் 3 செல்போன்கள் திருடப்பட்டது தொடர்பாக மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் ஓட்டல் ஊழியரான இசக்கியப்பன் செல்போனை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்