செல்போன் பறித்த வாலிபர் கைது

Update:2023-02-12 01:00 IST

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவர் 5 ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சுரேசை மிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தார். இதை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் வாலிபரை மடக்கி பிடித்து அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர் சென்னை வடபழனியை சேர்ந்த சந்தோஷ்குமார் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்