கஞ்சா கடத்தல் - வாலிபர் கைது

கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்

Update: 2023-06-14 19:39 GMT

தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றுமுன்தினம் இரவு செங்கிப்பட்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுக்குடி அருகே உள்ள சமத்துவபுரம் பஸ் நிறுத்தம் அருகே வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரை போலீசார் சோதனை செய்தனர். அதில் அவரிடம் 5 பாக்கெட் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த ரங்கநாதன் (வயது 27) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்வதற்காக திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் இருந்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கநாதனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்