திருவள்ளூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது; 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு

திருவள்ளூர் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.;

Update:2023-07-17 18:20 IST

திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு அடுத்த சூரப்பூண்டி பஸ் நிறுத்தம் அருகே பாதிரிவேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 4 பேரை அழைத்து விசாரிக்க முற்பட்டனர். போலீசாரை கண்டதும் அதில் 3 பேர் தப்பி ஓடிய நிலையில், ஒருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

போலீசார் விசாரணையில் பிடிப்பட்ட நபர் கும்மிடிப்பூண்டி அடுத்த காயலார்மேடு கிராமத்தை சேர்ந்த அர்ஜூன் (வயது 23) என்பதும் அவர் வைத்திருந்த பையில் விற்பனைக்காக மொத்தம் 1 கிலோ 300 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வி தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் அர்ஜூனை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய சூரப்பூண்டியை சேர்ந்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்