தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மீளவிட்டானில் இருந்து தூத்துக்குடி 4-ம் கேட் ரோடு பகுதியில் கஞ்சா விற்ற தூத்துக்குடி நேதாஜி நகரை சேர்ந்த ராம்ஜித் சிங் மகன் விஜேந்திர சிங் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.