புதுக்கோட்டை மாவட்ட தனிப்பிரிவு போலீசார் கறம்பக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கறம்பக்குடி இந்தியன் வங்கி அருகே 50 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த பிரசாத் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.