அரியலூர் அருகே உள்ள வாலாஜா நகரம், ராஜிவ் நகர், மின் நகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் அரியலூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் வாலாஜா நகரத்தை சேர்ந்த தங்க தமிழன் (வயது 20) என்பது தெரியவந்தது. மேலும் அவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் இவரிடம் இருந்து ½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு அரியலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.