கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Update: 2023-05-01 18:45 GMT

முத்துப்பேட்டையை அடுத்த ஆலங்காடு வடக்கு தெரு பகுதியில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் செந்தில்குமார் (வயது30) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்